சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை-மகன் + "||" + Death by Sridevi One belonging to one The father-son

ஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை-மகன்

ஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை-மகன்
ஸ்ரீதேவி மரணத்தால் போனிகபூரும், அவரது மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஸ்ரீதேவி மரணத்தால் போனிகபூரும், அவரது மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஸ்ரீதேவியை போனிகபூர் மணந்ததும் தனது முதல் மனைவி மோனா, மகன் அர்ஜுன், மகள் அன்சுலாவை பிரிந்தார். ஸ்ரீதேவியுடனேயே வசிக்க ஆரம்பித்தார். முதல் மனைவியை அவர் கண்டுகொள்ளவில்லை. சிறுவயதிலேயே தங்களை தவிக்கவிட்டு சென்றதாக போனிகபூர் மீது அர்ஜுனுக்கு கோபம் இருந்தது.


இதனால் ஸ்ரீதேவியையும் அவருக்கு பிடிக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தால் பேசாமலேயே சென்று விடுவார். போனிகபூர் குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோரிடமும் அவர் பேசியது இல்லை.

இந்த நிலையில் ஸ்ரீதேவி மரணம் அடைந்ததும் அர்ஜுன் கோபத்தை மறந்து தந்தைக்கு உதவியாக இருக்க துபாய் புறப்பட்டுச் சென்றார்.

ஸ்ரீதேவி உடலை மும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஸ்ரீதேவி இறுதி ஊர்வலத்தில் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் ஸ்ரீதேவி உடல் அருகிலேயே நின்றார். ஜான்வி, குஷி ஆகியோரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

ஸ்ரீதேவி மரணம் போனிகபூரையும், அவரது மகனையும் ஒன்று சேர்த்துவிட்டது என்று இந்தி பட உலகினர் பேசி வருகிறார்கள்.