சினிமா செய்திகள்

டிரெய்லர் வெளியானது‘காலா’ படத்தில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள்‘ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கல’ + "||" + The trailer was released In the movie 'Gala' Punch dialogues of Rajinikanth

டிரெய்லர் வெளியானது‘காலா’ படத்தில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள்‘ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கல’

டிரெய்லர் வெளியானது‘காலா’ படத்தில் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள்‘ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்கல’
ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள காலா படம் ஏப்ரல் 27-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியாக இருந்தது.
ஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள காலா படம் ஏப்ரல் 27-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியாக இருந்தது. ஆனால் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவையொட்டி ஒருநாள் தள்ளிவைத்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் அறிவித்து இருந்தார்.


இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டார். சில நிமிடங்களிலேயே காலா டிரெய்லரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி வெளியிட்டனர்.

டிரெய்லரின் தொடக்கத்தில் “போராடுவோம் போராடுவோம்” என்று மக்கள் கோஷமிடும் காட்சிகள் இருந்தன.

பின்னர் நானா படேகர் கால்மேல் கால்போட்டு, “காலா... என்ன பெயர் இது. இதற்கு என்ன அர்த்தம் என்று இந்தியில் கேட்கிறார்.

அப்படி அவர் கேட்டதும் கொட்டும் மழையில் ரஜினிகாந்த் குடைபிடித்துக் கொண்டு நிற்பது போல் காட்டப்படுகிறது. அடுத்த காட்சியில் கருப்பு பொடி தூவி பலர் நடனம் ஆடுகிறார்கள். அவர்கள் மத்தியில் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வருகிறார்.

பின்னணியில் சமுத்திரக்கனியின், “காலான்னா கருப்பு. காலன். கரிகாலன். சண்டை போட்டு காக்கிறவன் என்ற குரல் ஒலிக்கிறது.

காலா மனைவி ஈஸ்வரிராவ் “சண்டைதானே, போடுவாரு போடுவாரு எத்தனை நாளைக்கு போடுவாருன்னு நானும் பார்க்கேன்” என்கிறார். அப்படி அவர் சொன்னதும் அடுத்த காட்சியில் ஒரு குடோன் தீப்பிடித்து எரிகிறது.

அங்கு ஆக்ரோஷமாக ரவுடிகளை அடித்து பந்தாடுகிறார் ரஜினி. தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்லை தமிழில், “வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன். தில் இருந்தா மொத்தமா வாங்கலே” என்று பேசி ரவுடிகளை அடித்து நொறுக்கி தெறிக்க விடுவதுபோல் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

“இந்த காலாவோட முழு ரவுடிதனத்தை நீங்க பார்த்தது இல்லல்ல. பார்ப்பீங்க” என்று அவர் பேசும் வசனங்களும் உள்ளன.

இந்த வசனங்களையும், காட்சிகளையும் ரசிகர்கள் ரஜினிகாந்தின் அரசியலோடு இணைத்து “வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன் தில் இருந்தா வாங்கல” என்று என்று பேசுவது போல் மீம்ஸ்களை உருவாக்கி இணையதளங்களில் பரப்பி வருகிறார்கள்.