சினிமா செய்திகள்

எனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம் + "||" + Love my parents shared is pure, please don't tarnish it, says Sridevi's daughter Janhvi

எனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்

எனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்
எனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து அதை களங்கப்படுத்த வேண்டாம் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கமாக தெரிவித்துள்ளார். #SriDevi #JhanviKapoor
மும்பை,

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தால், உடைந்து போன கணவர் போனி கபூர் கடந்த சில தினங்களுக்கு முன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி தனது தாய் பற்றி மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். ஜான்வி கபூர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய பிறந்தநாளில் உங்கள் அனைவரிடம்  நான் கேட்டுக்கொள்வது ஒன்றை மட்டும் தான். நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள். என் பெற்றோர்கள் இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள். 

அவர் மிகச்சிறந்த நடிகை, தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார். என் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன். நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாது” இவ்வாறு உருக்கமாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.