சினிமா செய்திகள்

“சினிமாவில் நீடிக்க திறமை அவசியம்” - ரகுல் பிரீத்சிங் + "||" + "Proceed in cinema Talent is necessary "- Rahul Breathe Singh

“சினிமாவில் நீடிக்க திறமை அவசியம்” - ரகுல் பிரீத்சிங்

“சினிமாவில் நீடிக்க திறமை அவசியம்” - ரகுல் பிரீத்சிங்
“தமிழ், தெலுங்கில் எனக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. இந்தியிலும் படங்கள் வருகிறது. கார்த்தி ஜோடியாக நடித்து திரைக்கு வந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் பெயர் வாங்கி கொடுத்தது.
டிகை ரகுல் ப்ரீத்சிங் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“தமிழ், தெலுங்கில் எனக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. இந்தியிலும் படங்கள் வருகிறது. கார்த்தி ஜோடியாக நடித்து திரைக்கு வந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் பெயர் வாங்கி கொடுத்தது. சூர்யா ஜோடியாகவும் புதிய படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நடிகையாக இருப்பவர் எந்தெந்த மொழி படங்களில் நடிக்கிறாரோ அந்த மொழிகளை தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.


அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி நடிக்க முடியும். ஒவ்வொரு மொழி கலாசாரமும் தெரிந்து இருக்க வேண்டும். மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழ் மொழியை கற்று வருகிறேன். இந்திக்கு போனதால் தென்னிந்திய மொழி படங்களை குறைத்து விட்டதாக தகவல் பரவி உள்ளது.

நான் எப்போதும் தென்னிந்திய மொழி படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணைப்போல் பார்க்கிறார்கள். தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். எல்லா மொழி படங்களுக்கும் நான் பொருந்துகிறேன். கதாநாயகிகளுக்கு அழகு முக்கியம்.

அம்மா, அப்பாவிடம் இருந்து எனக்கு அழகு வந்தது. ஆனாலும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டுமானால் திறமை முக்கியம். திறமை இல்லாத நடிகைகளை ஒதுக்கி விடுவார்கள். முன்பெல்லாம் கதைகளில் நான் ஈடுபாடு காட்டுவது இல்லை. வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடிப்பேன். இப்போது கதை தேர்வில் அக்கறை எடுக்கிறேன்.

நல்ல கதைகள், பெரிய கதாநாயகர்கள், பட நிறுவனம் போன்றவற்றை மனதில் வைத்தே படங்களில் நடிக்க சம்மதிக்கிறேன். பெரிய கதாநாயகர்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களுடன் நடித்ததற்காக ஓடிய படங்களும் இருக்கிறது.”

இவ்வாறு ரகுல் பிரீத்சிங் கூறினார்.