சினிமா செய்திகள்

2 நடிகர்கள் திருமணம் + "||" + 2 actors married

2 நடிகர்கள் திருமணம்

2 நடிகர்கள் திருமணம்
நடிகர்கள் கதிர், ரமேஷ் திலக் திருமணங்கள் நேற்று நடந்தன. கதிர் மதயானை கூட்டம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
டிகர்கள் கதிர், ரமேஷ் திலக் திருமணங்கள் நேற்று நடந்தன. கதிர் மதயானை கூட்டம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். கிருமி படத்திலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். மாதவன், விஜய்சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘விக்ரம் வேதா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது சிகை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


கதிருக்கும், சஞ்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மணமக்களை பலர் நேரில் வாழ்த்தினார்கள். நடிகர் ரமேஷ் திலக் சூதுகவ்வும், ஆரஞ்சு மிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இவருக்கும் சண்டை இயக்குனர் ராம்போ ராஜ்குமார் மகள் நவலட்சுமிக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமணம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நேற்று நடந்தது.