4 ஆஸ்கார் விருதுகளை பெற்ற தி ஷேப் ஆப் வாட்டர்


4 ஆஸ்கார் விருதுகளை பெற்ற தி ஷேப் ஆப் வாட்டர்
x
தினத்தந்தி 5 March 2018 6:31 AM GMT (Updated: 5 March 2018 6:31 AM GMT)

13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்து உள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ்

 90-வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.  ஆஸ்கர் விருது விழாவில் இன்று ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டதும், மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் மறைந்த பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ரோஜர் மூர், ஜோனதன் டெமி, ஜான் ஹெட், டான் ரிக்கிள்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கும் இந்த மேடையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  டாம் ப்ரெட்டியின் ரூம் அட் தி டாப் பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தினார் எட்டி வெட்டார்.

விழாவில்  தி ஷேப் ஆப் வாட்டர் சிறந்தபடமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. 

சிறந்த நடிகையாக பிரான்சிஸ் மெக்டார்மண்ட்  (படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி) சிறந்த நடிகராக கேரி ஓல்டு மேன் ( படம் டார்க்கெஸ்ட் ஹவர்) தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்து உள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (குல்லெர்மோ டெல் டோரா), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ( பால் டென்ஹாம்) சிறந்த இசை (அலெக்சாண்டர்) ஆகிய நான்கு விருதுகள் கிடைத்தன.

அமெரிக்க, பேன்டசி படம். அறுபதுகளில் நடக்கிறது கதை. சிறுவயதிலேயே பேச முடியாத இளம்பெண்ணுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றின் ரகசிய பரிசோதனைக் கூடத்தில் இரவு நேரப் பணி. நீரிலும் நிலத்திலும் வசிக்கும் மனிதனைப் போன்ற உயிரினம் ஒன்று ஆய்வுக்காகப் பரிசோதனைக் கூடத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைப் பராமரிக்கும் பொறுப்பு அவளுக்கு. அந்த உயிரினம் அவள் வாழ்க்கையையே மாற்றுகிறது. அதனுடன் பழகும் அவள், ஒரு கட்டத்தில் அதை நேசிக்கத் தொடங்குகிறாள். காதல் முற்றுகிறது.

விண்வெளி ஆராய்ச்சிக்கான பரிசோதனை அதன் மீது தொடங்கப்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து அதை விடுவிக்க கடுமையாக முயற்சிக்கிறாள் அந்தப் பெண். அதில் ஜெயித்தாளா, இல்லையா என்பதுதான் கதை. திரில்லர் பாணி கதையான இதில் சேலி ஹாகின்ஸ், மைக்கேல் ஷானன், ரிச்சர்ட் ஜென்கின்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டங்கிர்க் படம் கைப்பற்றியது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.

Next Story