சினிமா செய்திகள்

நடிகை தமன்னாவின் அழகு ரகசியம் + "||" + Actress Tamanna's beauty is secret

நடிகை தமன்னாவின் அழகு ரகசியம்

நடிகை தமன்னாவின் அழகு ரகசியம்
நடிகை தமன்னா அழகு ரகசியம் பற்றி கூறுகிறார்.

நடிகை தமன்னா சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இன்னும் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். கடும் உடற்பயிற்சிகள் செய்வது இல்லை. ஆனாலும் அவருக்கு உடல் எடை கூடவில்லை. தனது அழகு ரகசியம் குறித்து தமன்னா சொல்கிறார்:-


“நடிகைகளுக்கு அழகு முக்கியம். உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என்று உடலை கட்டுக்கோப்பாக அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். சில நடிகைகள் சினிமாவுக்கு வந்து கொஞ்ச படங்களில் நடித்ததுமே எடை கூடி குண்டாகி விடுகிறார்கள். இதனால் பட வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை எடை கூடாமல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இப்படி இருப்பதற்கு என்ன காரணம் எதையெல்லாம் சாப்பிடுகிறீர்கள்? உடற்பயிற்சிகள் செய்கிறீர்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்கிறார்கள். எனது அழகு ரகசியம் காப்பி, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றிலும்தான் இருக்கிறது.

தினமும் காலையில் காப்பியில் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்து வருகிறேன். வெண்ணெய் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தேங்காய் எண்ணெய் சக்தி கொடுக்கிறது. இதுதான் எனது அழகு ரகசியம். இதை குடித்தால் உடலில் மாயாஜாலம் நடப்பதை உணர்வீர்கள்.” இவ்வாறு தமன்னா கூறினார்.