சினிமா செய்திகள்

சமூக வலைத்தள அவதூறும், நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமும் + "||" + Social website scam and actress Gayatri Raghuram

சமூக வலைத்தள அவதூறும், நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமும்

சமூக வலைத்தள அவதூறும், நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமும்
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்.

சார்லி சாப்ளின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி விசில், ஸ்டைல், பரசுராம் என்று பல படங்களில் நடித்துள்ள காயத்ரி ரகுராம் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தும் பிரபலமானார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காயத்ரி ரகுராமை சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். டுவிட்டரில் அவர் ஏதேனும் கருத்து பதிவிட்டால் அதை கேலி செய்து மீம்ஸ்கள் போடுகிறார்கள். காயத்ரி ரகுராம் பதிவிடும் அவரது படங்கள் பற்றியும் கலாய்க்கிறார்கள்.

இது காயத்ரி ரகுராமுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னை அவதூறு செய்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளிப்பேன் என்று எச்சரித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“சமூக வலைத்தளத்தில் கேலி செய்வதையும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதையும் இன்றைக்கே நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து நீங்கள் யார் என்பதை கண்டு பிடிப்பேன். அந்த நபர் நிச்சயமாக தண்டிக்கப்படுவார். அது தனிநபராக இருந்தாலும் சரி காசு கொடுத்து பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி.

இதை நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். என்னையோ ஜூலியையோ யாரை கேலி செய்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பேன். நான் பயப்பட மாட்டேன். என் பொறுமையை சோதித்து விட்டனர். கெட்ட வார்த்தைகளால் திட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கி தருவேன்.” இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.