சினிமா செய்திகள்

வெளிநாட்டு ஆடம்பர கார் வாங்கிய நடிகர் பிரிதிவிராஜுக்கு ரூ.50 லட்சம் வரி + "||" + Actor Prithviraj who bought a foreign luxury car for Rs 50 lakh

வெளிநாட்டு ஆடம்பர கார் வாங்கிய நடிகர் பிரிதிவிராஜுக்கு ரூ.50 லட்சம் வரி

வெளிநாட்டு ஆடம்பர கார் வாங்கிய நடிகர் பிரிதிவிராஜுக்கு ரூ.50 லட்சம் வரி
வெளிநாட்டு ஆடம்பர கார் வாங்க நடிகர் பிரிதிவிராஜ் ரூ.50 லட்சம் வரி செலுத்தினார்.

நடிகை அமலாபால் ஆடம்பர காரை புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ் தனது சொகுசு காரை அதிக வரி செலுத்தி கேரளாவிலேயே பதிவு செய்துள்ளார். இவர் மொழி, சத்தம் போடாதோ, கனாகண்டேன், வெள்ளித்திரை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


பெங்களூரில் உள்ள ஒரு ஷோரூமில் இத்தாலி நாட்டு லம்போகினி காரை நடிகர் பிருதிவிராஜ் ரூ.2 கோடியே 13 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார். இந்த காரை பதிவு செய்வதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்தார். அங்கு ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்து 800 ரொக்கமாக கொடுத்து காரை பதிவு செய்தார்.

பின்னர் பதிவு செய்த தனது வாகனத்துக்கு கே.எல்.7 சி.என்.1 என்ற பதிவு எண்ணை வழங்குமாறு கேட்டார். இதே பதிவு எண்ணை மேலும் 4 பேர் கேட்டார்கள். இதனால் ஆர்.டி.ஓ அந்த எண்ணை ஏலத்தில் விட்டார். பிரிதிவிராஜ் ரூ.7 லட்சத்துக்கு அதை ஏலத்தில் வாங்கினார். இந்த ஆடம்பர காருக்காக அவர் அரசுக்கு மொத்தம் ரூ.50 லட்சத்து 14 ஆயிரத்து 800 வரியாக செலுத்தினார்.