சினிமா செய்திகள்

திருமணத்துக்குப்பின் தெலுங்கு படத்தில் மீண்டும் சமந்தா-நாக சைதன்யா ஜோடி + "||" + Samantha-Naga Chaitanya couple back in the Telugu film after marriage

திருமணத்துக்குப்பின் தெலுங்கு படத்தில் மீண்டும் சமந்தா-நாக சைதன்யா ஜோடி

திருமணத்துக்குப்பின் தெலுங்கு படத்தில் மீண்டும் சமந்தா-நாக சைதன்யா ஜோடி
திருமணத்துக்குப்பின் ஒரு புதிய தெலுங்கு படத்தில் சமந்தா-நாக சைதன்யா ஜோடி சேர்ந்தார்கள்.
நிஜ வாழ்க்கையில், கணவர்-மனைவியாகி விட்ட சமந்தா-நாக சைதன்யா, திருமணத்துக்குப்பின் ஒரு புதிய தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்தார்கள்.

காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில், ஒற்றுமையாக குடும்பம் நடத்துபவர்கள் ஒரு சிலரே. திருமணத்துக்கு முன்பு சேர்ந்து நடித்த சில நட்சத்திர ஜோடிகள், திருமணத்துக்குப்பின் ஜோடியாக நடிக்கவில்லை.


இந்த பட்டியலில் அஜித்குமார்-ஷாலினி, சூர்யா- ஜோதிகா, பிரசன்னா-சினேகா ஆகிய ஜோடிகள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில், சமந்தா-நாக சைதன்யா இருவரும் மிக பிரபலமானவர்கள். இவர்கள் திருமணம், கடந்த வருடம் அக்டோபர் மாதம், ஐதராபாத்தில் நடந்தது. திருமணத்துக்குப்பின் இரண்டு பேரும் தனித்தனியாக நடித்து வந்தார்கள். சமந்தா ஒரு தமிழ் படத்திலும், நாக சைதன்யா ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வந்தனர்.

இந்த நிலையில், சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இது, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம். காதல் ஜோடியாக நடிக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சம்மதித்து இருக்கிறார்கள்.

படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் ஷிவ்நிர்வானா இயக்குகிறார். இந்த தகவலை நாக சைதன்யா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார்.