சினிமா செய்திகள்

ஸ்டிரைக் காரணமாக அஜித்குமார் படப்பிடிப்பு தள்ளிவைப்பு + "||" + Ajith Kumar's shooting for the strike

ஸ்டிரைக் காரணமாக அஜித்குமார் படப்பிடிப்பு தள்ளிவைப்பு

ஸ்டிரைக் காரணமாக அஜித்குமார் படப்பிடிப்பு தள்ளிவைப்பு
ஸ்டிரைக் காரணமாக அஜித்குமார் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விசுவாசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, ‘விசுவாசம்’ படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.


இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.