சினிமா செய்திகள்

நடிகைகளை காதல் காட்சிகளுக்கு பயன்படுத்துகின்றனர் -ராதிகா ஆப்தே + "||" + Actresses are used for love scenes - Rathika Apte

நடிகைகளை காதல் காட்சிகளுக்கு பயன்படுத்துகின்றனர் -ராதிகா ஆப்தே

நடிகைகளை காதல் காட்சிகளுக்கு பயன்படுத்துகின்றனர் -ராதிகா ஆப்தே
நடிகைகளை காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.

ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ராதிகா ஆப்தே அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கவர்ச்சி கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-


“நடிகைகளை காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனக்கு அதுபோன்று நடிப்பதில் உடன்பாடு இல்லை. திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறேன்.

நான் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் அனைத்து படங்களிலுமே எனக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. படப்பிடிப்புகளில் தினமும் புதிய விஷயங்களை கற்கிறேன். எனக்கும் இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மும்பையில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறோம். லண்டனிலும் வீடு இருக்கிறது. மும்பை வீட்டில் அழகாக உள் அலங்காரம் செய்து இருக்கிறேன். நமது கலாசார பண்பாடுகள் எனக்கு பிடிக்கும். அவற்றை பின்பற்றுகிறேன்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.