சினிமா செய்திகள்

“உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது” -கவிஞர் வைரமுத்து + "||" + Life is hurting Poet Vairamuthu

“உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது” -கவிஞர் வைரமுத்து

“உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது”
-கவிஞர் வைரமுத்து
உயிர் வலிக்கிறது. ஊரே அழுகிறது. காட்டுத் தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற சாகச பயிற்சிக்கு சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கியதும், அவர்களில் 9 பேர் உயிர் இழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்காக பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து ‘உயிர் வலிக்கிறது’ என்ற தலைப்பில் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“உயிர் வலிக்கிறது. ஊரே அழுகிறது. காட்டுத் தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். ‘சாவே உனக்கொரு சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டி பாரோமோ’ என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கி கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனித பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம். புதிய இழப்புகள் நேராமல் காப்போம்”.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் குற்றச்சாட்டு: பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்
பாடகி சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்து உள்ளார்.
2. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாடலானது
கவிஞர் வைரமுத்துவின் கவிதை ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் பாடலானது.