சினிமா செய்திகள்

தெலுங்கில் வெளியாகும் ‘அறம்’நயன்தாரா மகிழ்ச்சி + "||" + Will be released in Telugu aram movie

தெலுங்கில் வெளியாகும் ‘அறம்’நயன்தாரா மகிழ்ச்சி

தெலுங்கில் வெளியாகும் ‘அறம்’நயன்தாரா மகிழ்ச்சி
அறம் படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
நயன்தாரா நடித்து தமிழில் வெளியான ‘அறம்’ படம் நல்ல வசூல் பார்த்தது. கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நடித்து இருந்தார். கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர்.

இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன. அறம் படம் தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இதுவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால் என்று முன்னணி கதாநாயகர்களின் படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வந்தன. இப்போது நயன்தாரா படமும் தெலுங்குக்கு போகிறது.

நயன்தாரா ஏற்கனவே முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அவருக்கு அங்கு நல்ல மார்க்கெட்டும் உள்ளது. எனவேதான் கதாநாயகன் இல்லாத அறம் படத்தை நயன்தாராவை நம்பி தெலுங்கில் வெளியிடுகிறார்கள். இதனால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறார்.