சினிமா செய்திகள்

நடிகை ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடி சொத்து + "||" + Actress Jaya Bachchan's property worth Rs.100 crore

நடிகை ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடி சொத்து

நடிகை ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடி சொத்து
ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
ந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான ஜெயாபச்சன் உத்தரபிரதேசத்தில் முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனுவில் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பதால் ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். சொத்து பட்டியலையும் அதில் இணைத்துள்ளார். கணவர் அமிதாப்பச்சனுக்கும் தனக்கும் ரூ.460 கோடி அசையா சொத்துக்களும் ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளன என்று கூறியுள்ளார்.

நொய்டா, போபால், லக்னோ, காந்தி நகர், அகமதாபாத்தில் நிலங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அமிதாப்பச்சனிடம் ரூ.36 கோடிக்கு நகைகளும் தன்னிடம் ரூ.26 கோடிக்கு நகைகளும் இருப்பதாகவும் இருவருக்கும் ரூ.13 கோடியில் 12 கார்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

2014-ல் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதாவை சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா தனது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று குறிப்பிட்டு பணக்கார எம்.பியாக கருதப்பட்டார். அவர் சாதனையை தற்போது நடிகை ஜெயாபச்சன் முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். மருமகள் ஐஸ்வர்யாராய், மகன் அபிஷேக்பச்சன் ஆகியோர் பெயர்களில் இருக்கும் சொத்துக்களை இதில் குறிப்பிடவில்லை.