சினிமா செய்திகள்

திருமணமான ஆந்திர மந்திரி மகனுடன் சாய் பல்லவி காதலா? + "||" + AP minister opens up about Ravi Teja and Sai Pallavi marriage

திருமணமான ஆந்திர மந்திரி மகனுடன் சாய் பல்லவி காதலா?

திருமணமான ஆந்திர மந்திரி மகனுடன் சாய் பல்லவி காதலா?
மகனுடன் சாய் பல்லவி காதலா என்பதற்கு மந்திரி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. 

சாய் பல்லவிக்கும் தெலுங்கு நடிகர் கண்டா ரவிதேஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும்  தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. கண்டா ரவிதேஜா திருமணமானவர். 

'ஜெயதேவ்' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஆந்திர கல்வி மந்திரி கண்டா ஸ்ரீனிவாஸ் மகன் ஆவார். 

இந்த காதல் கிசுகிசுவை மந்திரி கண்டா ஸ்ரீனிவாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது,"எனது மகனும் சாய் பல்லவியும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் இது போன்ற வதந்திகளை பரப்புவது வருத்தமாக இருக்கிறது. 

வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. எனது மகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. காதல் வதந்தியால் சாய் பல்லவி மற்றும் எனது மகனின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்" என்றார்.