சினிமா செய்திகள்

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள் + "||" + Shah Rukh Khan's daughter heroine

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
இந்தி நடிகர் ஷாருக்கான் மகள் சுகானா கதாநாயகியாகிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜானவி ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். தொடர்ந்து ஷாருக்கான் மகள் சுகானாவும் கதாநாயகியாகிறார். இவருக்கு 17 வயது ஆகிறது. கல்லூரியில் படிப்பதுடன் மாடலிங்கும் செய்து வருகிறார். நடிப்பு, நடன பயற்சிகளும் பெறுகிறார்.

சுகானாவுக்கு நடிகையாக ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக தந்தை ஷாருக்கான் மூலம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நிருபர்களிடம் கூறும்போது “சுகானாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. நடிப்பதற்கான திறமையும் தோற்றமும் அவளுக்கு உள்ளது. முதலில் படிப்பை முடித்து விட்டு அதன்பிறகு மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்கும்படி நான் அறிவுரை கூறியிருக்கிறேன்” என்றார்.

இயக்குனர்கள் பலர் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க கதைகளுடன் ஷாருக்கானை அணுகி வருகிறார்கள். விரைவில் பட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.