சினிமா செய்திகள்

ஆபாச உடையில் வந்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு + "||" + Resistance to Deepika Padukone

ஆபாச உடையில் வந்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு

ஆபாச உடையில் வந்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு
நடிகை தீபிகா படுகோனே பொது விழாக்களுக்கு ஆபாச உடையில் வந்து பரபரப்பு ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் வின் டீசல் இந்தியா வந்தபோது தீபிகா படுகோனே அணிந்திருந்த அரைகுறை ஆடை விமர்சனங்களை கிளப்பியது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.

தொடர்ந்து ஆபாச உடையில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். மும்பையில் விருது வழங்கும் நிகழ்ச்சியொன்று நடந்தது. இந்த விழாவில் மீண்டும் தீபிகா படுகோனே அணிந்து வந்த அரைகுறை உடை பலரையும் முகம் சுழிக்க வைத்தது. முன்னழகு தெரியும்படி வெள்ளை உடை உடுத்தி வந்து இருந்தார். கூட்டத்தினர் அவரையே உற்று பார்த்தனர்.

சிலர் உடை குறித்து எரிச்சலோடு முணுமுணுத்து வெறுப்பை காட்டினார்கள். அதை அவர் பொருட்படுத்தவில்லை. கவர்ச்சியை காட்டி விதவிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். தீபிகா படுகோனே ஆபாச உடை அணிந்திருந்ததை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

தீபிகா படுகோனே கோச்சடையான் ‘அனிமேஷன்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர். சர்ச்சையை கிளப்பிய பத்மாவத் சரித்திர படத்தில் சித்தூர் ராணி பத்மினியாக நடித்து எதிர்ப்புக்கு ஆளானார். அவர் தலைக்கு ராஜ புத்திர அமைப்பினர் பரிசு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.