சினிமா செய்திகள்

சீனாவில் வசூல் குவிக்கும் அமீர்கான் படங்கள் + "||" + Aamir Khan films in China

சீனாவில் வசூல் குவிக்கும் அமீர்கான் படங்கள்

சீனாவில் வசூல் குவிக்கும் அமீர்கான் படங்கள்
நடிகர் அமீர்கான் நடித்துள்ள படங்களை சீனர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள்.
டிகர் அமீர்கான் படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் நடித்துள்ள படங்களை சீனர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள். மக்கள் தொகையை அதிகமாக கொண்ட சீனாவிலும், இந்தியாவிலும் அவர் படங்கள் வசூல் குவிப்பதால் உலக சூப்பர் ஸ்டாராக வர்ணிக்கப்படுகிறார்.

அமீர்கான் நடித்துள்ள தங்கல் படம் சீனாவில் ரூ.1,908 கோடி வசூலித்தது. அவரது சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் ரூ.874 கோடியும், பி.கே படம் ரூ.834 கோடியும் சீனாவில் வசூலித்து இருக்கிறது. சீன நடிகர்கள் படங்களை வசூலில் அமீர்கான் படங்கள் பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

இதுகுறித்து அமீர்கான் கூறும்போது, “இந்தியாவிலும், சீனாவிலும் சேர்த்து 300 கோடி பேர் எனக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் பாதி ஆகும். இந்த விஷயத்தில் மேலை நாடுகளை நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம். 3 இடியட் படத்தில் இருந்தே சீனாவில் எனக்கு ரசிகர்கள் உருவானார்கள். அந்த படத்தை அப்போது அங்கு திரையிடாத போதிலும் திருட்டு சி.டியில் அதனை அவர்கள் பார்த்து எனக்கு ரசிகர்களாக மாறினார்கள்” என்றார்.