சினிமா செய்திகள்

பிருதிவிராஜின் புதிய தோற்றம் + "||" + Prithviraj new look

பிருதிவிராஜின் புதிய தோற்றம்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
காளியன் படத்தில் நடிக்கும் பிருதிவிராஜ் தோற்றம் வெளியாகியுள்ளது.
லையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார் பிருதிவிராஜ். இவர் தமிழில் நடித்த மொழி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கனா கண்டேன், பாரிஜாதம், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், காவிய தலைவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில் தயாராகும் காளியன் என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். இதில் வீர தீரமாக சண்டையிடும் போர்வீரன் கதாபாத்திரத்தில் வருகிறார். இதற்காக விசேஷ சண்டை பயிற்சிகள் கற்று இருக்கிறார். காளியன் படத்தில் பிருதிவிராஜ் நடிக்கும் தோற்றம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.