பிரபல பட தொகுப்பாளர் அனில் மல்நாட் திடீர் மரணம்


பிரபல பட தொகுப்பாளர் அனில் மல்நாட் திடீர் மரணம்
x
தினத்தந்தி 19 March 2018 10:36 PM GMT (Updated: 19 March 2018 10:36 PM GMT)

பிரபல பட தொகுப்பாளர் அனில் மல்நாட் சென்னையில் மரணம் அடைந்தார்.

பிரபல பட தொகுப்பாளர் அனில் மல்நாட் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. அனில் மல்நாட் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பட தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

தமிழில் புதுக்கோட்டையில் இருந்து சரவணன், தேவதையை கண்டேன், கிழக்கு கடற்கரை சாலை, பேரரசு, கிழக்கு வாசல், ஹானஸ்ட் ராஜ், ராஜஸ்தான், பொட்டு அம்மன், சார்லி சாப்ளின், மகாநடிகன் உள்ளிட்ட பல படங்களில் பட தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தேசிய விருதும் பெற்றுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாரதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அனில் மல்நாட்டுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story