சினிமா செய்திகள்

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை + "||" + Black Panther movie collection of Rs 7,000 crore

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்தது.
உலக அளவில் ஹாலிவுட் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகின்றன. இந்தியாவிலும் வசூல் குவிக்கிறது. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி இந்த படங்கள் வெளிவருவதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். பிராந்திய மொழிகளிலும் ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்து வெளியிடுவதால் நல்ல வசூல் குவிக்கின்றன.


கடந்த மாதம் வெளியான பிளாக் பேந்தர் படம் உலக அளவில் பிரமாண்ட வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த படம் இதுவரை ரூ.7,152 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. 5 வாரங்களாக வசூலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் 2009-ல் வெளியான அவதார் படத்தின் சாதனையை சமன் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பட அதிபர்கள் ஸ்டிரைக்கால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ‘பிளாக் பேந்தர்’ படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.