சினிமா செய்திகள்

சினிமாவில் போட்டி உள்ளது - நடிகை இலியானா + "||" + There is competition in cinema - actress Iliana

சினிமாவில் போட்டி உள்ளது - நடிகை இலியானா

சினிமாவில் போட்டி உள்ளது - நடிகை இலியானா
சினிமாவில் போட்டி உள்ளது என நடிகை இலியானா தெரிவித்தார்.
நண்பன் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலியானா தற்போது இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு சினிமாவில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. 5 ஆண்டுகளில் இப்படி இருக்க வேண்டும் என்று எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. எதிர்பார்ப்புகள் இருந்தால்தான் ஏமாற்றம் ஏற்படும். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.


எனக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சில படங்களில் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி என்னை மாற்றிக்கொள்ள தயாரா? என்று கேட்கிறார்கள். சினிமாவில் போட்டி நிறைந்து இருக்கிறது. மற்றவர்களை விட நமக்கு நல்ல கதாபாத்திரங்களும், கதைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எனக்கு மனப்போராட்டங்கள் இருந்தன. அதில் இருந்து தற்போது தேறி வருகிறேன். நடிப்பில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுப்பது நன்றாக இருக்கிறது. எனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறேன்.” இவ்வாறு இலியானா கூறினார்.