சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை + "||" + Sridevi's life cinematic film is Vidya Balan talks to act

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது அதில் வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இந்தி திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி துபாயில் ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தது திரையுலகை உலுக்கியது. அவர் 300 படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்க அவரது கணவர் போனிகபூர் திட்டமிட்டு உள்ளார்.


பெங்களூருவில் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்களும் ஆவணப்படம் எடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி இயக்குனர் ஹன்சல் மேத்தா நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது படமொன்றில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். அவர் இறந்துபோனதால் எனது ஆசை நிறைவேறாமல் போனது. எனவே ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்து இருக் கிறேன். இந்த படத்தை ஸ்ரீதேவிக்கு அர்ப்பணிப்பேன்” என்றார்.

ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்தது, இந்திக்கு சென்று முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, பண கஷ்டம் ஏற்பட்டது, தவறான சிகிச்சையால் அவரது தாய் மரணம் அடைந்தது, ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது, துபாயில் மரணம் அடைந்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இந்த படத்தில் காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளார்.

இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இதுபோல் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களில் நடிக்கவும் நடிகர்கள் தேர்வு நடக்கிறது.