சினிமா செய்திகள்

அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு -கமல்ஹாசன் + "||" + With political intent  The procession that divides the people Allow For anyone who smells Government of Tamilnadu - Kamal Hassan

அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு -கமல்ஹாசன்

அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு -கமல்ஹாசன்
அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என கமல்ஹாசன் கூறி உள்ளார். #VHPRadhaYatra #Kamalhaasan
சென்னை

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று  ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரைமூலம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்திவருகின்றன. மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். பின்னர், வெளிநடப்புச் செய்தனர்.

தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில்   கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. தி.மு.க செயல் தலைவர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு முதல்வர் பதில் அளித்தார். முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என  தி.மு.க எம்.எல்.ஏக்கல் அமளியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து  திமுகவினர் வெளியேற்றபட்டனர்.

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல்  யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என டுவிட் செய்து உள்ளார்.