‘அதோ அந்த பறவை போல’ படத்துக்காக தலக்கோணம் காட்டில், அமலாபால்!


‘அதோ அந்த பறவை போல’ படத்துக்காக  தலக்கோணம் காட்டில், அமலாபால்!
x
தினத்தந்தி 20 March 2018 8:40 AM GMT (Updated: 20 March 2018 8:40 AM GMT)

அமலாபால் நடித்து வரும் ‘அதோ அந்த பறவை போல’ படம், துணிச்சலான காட்சிகளுடன் கூடிய திகில் படமாக வளர்ந்து வருகிறது

கதை-திரைக் கதை-வசனத்தை அருண் ராஜகோபால் எழுதியிருக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“நான், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் டைரக்டர் ராம் பிரகாஷ் ராயப்பாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தேன். ‘அதோ அந்த பறவை போல,’ நான் இயக்கும் முதல் படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம், இது. துணிச்சல் மிகுந்த காட்சிகள் நிறைந்த திகில் படம்.

சம்பவங்கள் முழுவதும் நீலகிரி மலைப்பகுதியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அமலாபால், கதாநாயகியாக நடிக்கிறார். ஆசிஷ் வித்யார்த்தி வில்லனாக நடிக்கிறார். கதையில், இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய காட்சிகள் தலக்கோணம் காட்டில் படமாக்கப்பட்டுள்ளன. கோவையில், சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 50 சதவீத படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

கதாநாயகி அமலாபால் ஏன் காட்டுக்குள் போனார், எப்படி காட்டுக்குள் போனார், யார் மூலம் காட்டுக்குள் போனார், எதற்காக காட்டுக்குள் போனார்? என்ற கேள்விகளுக்கு பதிலாக திரைக்கதை அமைந்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை ஜோன்ஸ் தயாரிக்கிறார். 

Next Story