சினிமா செய்திகள்

விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது, சிலருக்கு முடிகிறது: பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன் + "||" + It takes hard work to survive: Amitabh Bachchan

விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது, சிலருக்கு முடிகிறது: பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன்

விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது, சிலருக்கு முடிகிறது:  பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன்
விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது என்றும் சிலருக்கு முடிகிறது என்றும் தனது பிளாக்கில் நடிகர் அமிதாப் பச்சன் இன்று எழுதியுள்ளார். #AmitabhBachchan

ஜோத்பூர்,

நடிகர் அமிதாப் பச்சன் இந்தி படமொன்றில் நடித்து வருவதுடன் அதற்காக இரவு முழுவதும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.  இன்று காலை படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த அவர் இதுபற்றி தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

அதில், விடியற்காலை சிலருக்கு தொடங்குகிறது… சிலருக்கு முடிகிறது.  நீங்கள் எப்படி அதனை காண விரும்புகிறீர்கள் என்பதனை சார்ந்தது அது.  எனது பணி நேற்று மாலை தொடங்கியது.  இன்று காலையில் அது நிறைவு பெற்றது.  உயிர் பிழைப்பதற்கும் மற்றும் மூச்சு விடுவதற்கும் கடின உழைப்பு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பையில் இருந்து மருத்துவர்களை அமிதாப் வர சொன்னார்.  இதனால் உடல்நல குறைவால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் பரவின.  ஆனால் அமிதாப் மற்றும் அவரது மனைவி ஜெயா உடனடியாக முன்வந்து, முதுகு மற்றும் தோள்வலியால் அமிதாப் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவலை உறுதிப்படுத்தினர்.

இதனை அமிதாப் உடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர் கானும் தெரிவித்து உள்ளார்.