சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகருடன் காதலா? -நடிகை ரேஷ்மி கவுதம் + "||" + Love with the Telugu actor? -Reeshmi Gautham

தெலுங்கு நடிகருடன் காதலா? -நடிகை ரேஷ்மி கவுதம்

தெலுங்கு நடிகருடன் காதலா? -நடிகை ரேஷ்மி கவுதம்
தெலுங்கு நடிகருடன் காதலா என நடிகை ரேஷ்மி கவுதம் விளக்கம் அளித்தார்.
பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக ‘கண்டேன்’ படத்தில் நடித்தவர் ரேஷ்மி கவுதம். மாப்பிள்ளை விநாயகர், தவ்லத் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரேஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுதீரும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.

ஐதராபாத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து ரேஷ்மி கவுதம் கூறியதாவது:-

“நானும் சுதீரும் காதலிப்பதாக வதந்தி பரவி உள்ளது. நாங்கள் இருவரும் நட்பாகத்தான் பழகி வருகிறோம். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. நடிப்பில்தான் எனது முழு கவனமும் உள்ளது.” இவ்வாறு ரேஷ்மி கவுதம் கூறினார்.