சினிமா செய்திகள்

கடும் உடற்பயிற்சி: எடையை குறைக்கும் சினேகா + "||" + Heavy Exercise: Sneha to reduce weight

கடும் உடற்பயிற்சி: எடையை குறைக்கும் சினேகா

கடும் உடற்பயிற்சி: எடையை குறைக்கும் சினேகா
கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் முயற்சியில் சினேகா ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த தம்பதிக்கு விகான் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து இருந்தார். மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். அவரது உடல் எடை கூடி இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு உதவியாக கணவர் பிரசன்னாவும் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று ஆலோசனைகள் கூறி வருகிறார். சினேகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.