சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்துக்காக புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் + "||" + Kamal Haasan is the new face for Indian-2

இந்தியன்-2 படத்துக்காக புதிய தோற்றத்தில் கமல்ஹாசன்

இந்தியன்-2 படத்துக்காக புதிய தோற்றத்தில் கமல்ஹாசன்
இந்தியன்-2 படத்துக்காக புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து பரபரப்பாக பேசப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்துக்கான அறிவிப்பை டைரக்டர் ஷங்கர் பிக்பாஸ் மேடையில் அறிவித்து பட வேலைகளை தொடங்கி உள்ளார். வெளிநாட்டில் இந்தியன்-2 படத்தின் விளம்பர பலூனையும் பறக்க விட்டார்.

முதல் பாகத்தில் லஞ்சத்தை கருவாக வைத்து இருந்தனர். இரண்டாம் பாகம் ஊழல் எதிர்ப்பு படமாக தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்- நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது. கதாநாயகியாக நடிக்க நயன்தாரா பெயரும் அடிபடுகிறது.

முதல் பாகத்தில் லஞ்சம் வாங்குபவர்களை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் கமல்ஹாசனின் வயதான இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. இரண்டாம் பாகத்தில் அவர் எந்த தோற்றத்தில் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்த நிலையில் பெரிய முறுக்கு மீசையில் இருக்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியன்-2 படத்துக்காக இந்த தோற்றத்தில் அவர் மாறி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கெட்டப்பை வரவேற்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.