சினிமா செய்திகள்

ரவிகுமார்–ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2 புதிய படங்கள் + "||" + 2 new movies starring Sivakarthigeyan

ரவிகுமார்–ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2 புதிய படங்கள்

ரவிகுமார்–ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2 புதிய படங்கள்
சிவகார்த்திகேயன் 2 புதிய படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
பொன்ராம் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். படத்தில் அவர் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிவகார்த்தி கேயன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தை முடித்தபின், அவர் 2 புதிய படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அதில் ஒரு படத்தை ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இவர், ‘இன்று நேற்று நாளை’ படத்தை டைரக்டு செய்தவர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகியாக ரகுல் பிரீத்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இன்னொரு படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ராஜேஷ் எம். டைரக்டு செய்கிறார். முதலில், இந்த படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்வதாக இருந்

தார். இப்போது அவர் மாற்றப்பட்டு, ராஜேஷ் எம். டைரக்டு செய்வார் என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ரவிகுமார் டைரக்டு செய்யும் படத்திலும், ராஜேஷ் எம். டைரக்டு செய்யும் படத்திலும் ஒரே சமயத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்.