நடிகர் விஜய் படப்பிடிப்பு: நடிகர்கள் சித்தார்த்- கருணாகரன் எதிர்ப்பு


நடிகர் விஜய்  படப்பிடிப்பு: நடிகர்கள் சித்தார்த்- கருணாகரன் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 March 2018 12:14 PM GMT (Updated: 21 March 2018 12:14 PM GMT)

நடிகர் விஜய் படத்தின் படப்பிடிப்பு சிறப்பு அனுமதி பெற்று நட்ந்த விவகாரம் நடிகர்கள் சித்தார்த், கருணாகரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சென்னை 

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும்  சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது.

இந்தப் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், பலர் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நடிகர் கருணாகரன், இது தொடர்பாக, ' 'தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்' என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? ' எனக் கேட்டு காட்டமான டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் நேற்று சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது. இந்தப் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதும், பலர் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் விஜய்யை விமர்சிக்கும் விதமாக, ' 'தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்' என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா?' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மெர்சல்' படத்தின் அந்தப் பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமையை கடைப்பிடிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் தொணிக்கும் வகையில் இந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதற்கு முன்னதாக, ஸ்ட்ரைக்கின்போது விஜய் படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதாக வந்த தகவல்களால், நகைச்சுவையாக ஒரு ட்வீட்டையும் போட்டிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா புகைப்படத்தைப் பதிவிட்டு, 'ஸ்ட்ரைக் இருக்கு.. ஆனா இல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருணாகரனின் இந்த ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில விஜய் ரசிகர்கள் கேவலமான வார்த்தைகளால் கருணாகரனை திட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சினிமா துறையினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்தால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தயவு செய்து அனுமதி கொடுங்கள். நாங்கள் அனைவரும் சமம் தான். ஒற்றுமை இல்லாவிடில் கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த தமிழக அரசு சினிமாவை கண்டுகொள்ளவில்லை, கண்டுகொள்ளவும் செய்யாது. இதை அவர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். அவர்கள் திடீர் என்று மாற ஏதாவது அதிசயம் தான் நடக்க வேண்டும். துறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். முதலில் ஒற்றுமையாக இருப்போம். அதன் பிறகு மாற்றம் ஏற்படும்.

தமிழ் சினிமாவுக்கு பைசா பலனில்லாதது எது என்று தெரிய வேண்டும் என்றால் என் டைம்லைனில் உள்ள கடைசி 100 பதில்களை பார்க்கவும். அசிங்கமான பாஷை, தேவையில்லாத விஷம், சம்பந்தமில்லா கோபம். இரண்டு குரூப் வேலையில்லா முட்டாள்கள் அனைவரின் பெயரையும், நேரத்தையும் கெடுக்கிறார்கள். 

சித்தார்த்தின் டுவீட்டை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதால் தான் உங்களுக்கு வேலை உள்ளது என்கின்றனர்.


Next Story