சினிமா செய்திகள்

உயரமான ஆண்களை பிடிக்கும் -ரகுல்பிரீத் சிங் + "||" + The tallest men love him - Raghulpreeth Singh

உயரமான ஆண்களை பிடிக்கும் -ரகுல்பிரீத் சிங்

உயரமான ஆண்களை பிடிக்கும் -ரகுல்பிரீத் சிங்
உயரமான ஆண்களை பிடிக்கும் என ரகுல்பிரீத் சிங் கூறினார்.
கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரகுல்பிரீத் சிங் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துவிட்டு இப்போது இந்திக்கு போய் இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-


“நான் ஆன்மிக வழியில் செல்ல ஆரம்பித்து உள்ளேன். சிறு வயதில் ஆன்மிக புத்தகங்களை விரும்பி படிப்பேன். அதுவே ஆன்மிக உணர்வுகளை என் மனதுக்குள் பதித்து இருக்கிறது. எல்லோரும் வாழ்க்கையை திட்டமிட்டு நகர்த்துகிறார்கள். நான் எந்த திட்டமும் வைத்துக்கொள்வது இல்லை. ஆன்மிக சிந்தனை இருப்பதால் நல்ல விஷயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.

நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடிக்க வந்தேன். கேமரா முன்னால் நிற்பது பிடித்ததால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் திட்டமிடுவது தேவை இல்லை. ஆன்மிக எண்ணங்களால் எனக்கு முதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அறிவில் தெளிவும் வந்து இருக்கிறது.

எப்படிப்பட்ட ஆண்களை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்கிறார்கள். நான் 5.9 அடி இருக்கிறேன். எனவே அதற்கும் மேல் உயரமாக உள்ள ஆண்களை பிடிக்கும். குறைந்தது ஆறடி உயரமாவது இருக்க வேண்டும். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். 10 வருடங்களுக்கு பிறகு திரும்பி பார்த்தால் ஒவ்வொரு படமும் முக்கிய படமாக தெரியவேண்டும்.

சினிமா நிரந்தர தொழில் இல்லை. ரசிகர்கள் விரும்பும்வரைதான் இதில் நீடிக்க முடியும். எனவேதான் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஐதராபாத்தில் உடற்பயிற்சி கூடங்கள் ஆரம்பித்து இருக்கிறேன்.” இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.