சினிமா செய்திகள்

படவாய்ப்புக்காக.... பிரபல நடிகை பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி + "||" + Radhika Apte reveals she had to do phone sex during the audition of the movie Dev D

படவாய்ப்புக்காக.... பிரபல நடிகை பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

படவாய்ப்புக்காக.... பிரபல நடிகை பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
இதெல்லாம் படவாய்ப்புக்காக என பிரபல நடிகை ராதிகா ஆப்தே பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குறை கூறினார். இவர் கபாலி படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் லெஜண்ட், லயன், ரத்த சரித்திரம் ஆகியவை ராதிகா ஆப்தே நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்கள். தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கவர்ச்சியாக நடிப்பது தவறு இல்லை என்றும், கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் தென் இந்திய நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தேன் என்று டி.வி. நிகழ்ச்சியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது தெலுங்கு பட உலகில் ஓய்வு பெற வேண்டியவர் யார்? என்ற கேள்விக்கு, ராம் கோபால் வர்மா ஓய்வு பெற வேண்டும் என்று பதில் கூறி அதிர்ச்சி அளித்திருந்தார்.

இந்த நிலையில்   தான் ஒரு படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக்கொண்டேன் என கூறி உள்ளார்.

"புனேவில் Dev D படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன், அப்போது போன் செக்ஸ் வைத்துக்கொள்ளுவது போல நடிக்க சொன்னார்கள். அதுவரை நான் ஒருமுறை கூட போன் செக்ஸ் வைத்துக்கொண்டதில்லை. இருப்பினும் அனைவரது முன்னிலையில் அப்படி செய்யவேண்டியதாக போனது"
என ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய ராதிகா ஆப்தே தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
2. 500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.
3. திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.
4. பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி
பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy
5. செக்யூரிட்டியாக பணியாற்றும் சினிமாவை மிரட்டிய கவர்ச்சி வில்லி பிரமிளாவின் மறுபக்கம்
நடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார்.