சினிமா செய்திகள்

திருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் தயாரிப்பாளர் மனைவி கருத்தால் சர்ச்சை + "||" + Target married men Actresses Consider the producer's wife Controversy

திருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் தயாரிப்பாளர் மனைவி கருத்தால் சர்ச்சை

திருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் தயாரிப்பாளர் மனைவி கருத்தால் சர்ச்சை
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி வெளியிட்ட டுவிட்டர் கருத்தால் திரையுலகத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
சென்னை

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா, நேற்றிரவு டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். இந்த டுவிட் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்த, பின்பு நேஹா அந்த பதிவை நீக்கி விட்டார்.

பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கினேன் என்ற விளக்கத்தை மற்றொரு டுவிட் பதிவில் நேஹா விளக்கியுள்ளார். 

அதில்,  நான் வெளியிட்ட கருத்துகள் எனது குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள் அல்ல. எனது கணவருடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களின் ஒரு சிலரது நடவடிக்கைகள்  அதிருப்தியடைய செய்துள்ளது. சில ஹீரோயின்கள் திருமணமானஆண்களின் வாழ்க்கையில் தலையிட்டு, பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். 

இதுதொடர்பாக கருத்துக் கூறினால் லீக்  என்ற வார்த்தையால் சர்ச்சையை ஏற்படுத்துவார்கள். நான் பிறரின் கவனத்தை ஈர்க்கவோ, நாடகமோ பதிவிடவில்லை. எனது கணவருடன் எனக்கு பிரச்னை என்பது போன்ற கருத்துக்கள் வந்ததாலும், சர்ச்சையை கிளப்பும் என்பதாலும் நான் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன். இருப்பினும் இது, நான் குறிப்பிட்ட அந்தப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சமூக வலைத்தளங்கள் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார்.