சினிமா செய்திகள்

பெண் வேடமிட்ட பிரபல இசையமைப்பாளர் வைரலாகும் போட்டோ + "||" + girl is disguised Famous Visual Composer

பெண் வேடமிட்ட பிரபல இசையமைப்பாளர் வைரலாகும் போட்டோ

பெண் வேடமிட்ட  பிரபல  இசையமைப்பாளர்  வைரலாகும் போட்டோ
இசையமைப்பாளர் அனிருத்தின் பெண் வேடமிட்ட போட்டோ வைரலாகி வருகின்றது.
சென்னை 

இளம் இசையமைப்பாளர்கள் அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார். அடுத்து அவரின் நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு தற்போது இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை தாண்டி அனிருத் ஒரு சில படங்களில் தலையை காட்டினாலும் தற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அப்படியே அச்சு அசலாக பெண் போல காட்சியளிக்கிறார் அனிருத்.