சினிமா செய்திகள்

தொழில் அதிபருக்கு எதிராக பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் பாலியல் பலாத்கார புகார் + "||" + Zeenat Aman files rape complaint, businessman arrested

தொழில் அதிபருக்கு எதிராக பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் பாலியல் பலாத்கார புகார்

தொழில் அதிபருக்கு எதிராக பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் பாலியல் பலாத்கார புகார்
பாலிவுட் நடிகை ஜீனத் அமன் பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை

பிரபல மூத்த பாலிவுட் நடிகை ஜீனத் அமன்.   1970களில் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது வெற்றியாளராகி பின்  மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றவர்.  இந்தித் திரைப்பட உலகிற்கு மேற்கத்திய கதாநாயகிகளின் தோற்ற அமைப்பை அறிமுகப்படுத்தி நிலையான தாக்கத்தை உண்டாக்கியவர். பாலிவுட்டின் கவர்ச்சி  நடிகையில் முன்னணியாக விளங்கியவர் .  ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம், ஹீரா பன்னா, யாதோங்கி  கி பராத், டான் மற்றும் பலர்  வெற்றி திரைப்படங்களில் நடித்து  புகழ் பெற்றவர் ஜீனத் அமன்.

 இவர்  கடந்த  ஜனவரி மாதம்   ஜூகு போலீஸ் நிலையத்தில் தொழிலதிபர் அமன் கன்னாவுக்கு எதிராக   ஒரு பாலியல்  புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் பெண்ணை பின் தொடர்தல் (சட்டப்பிரிவு 304 டி), பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்படுதல் (சட்டப்பிரிவி 509) ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் பின்னர் இந்த வழக்கு குற்றபிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...