சினிமா செய்திகள்

“குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது”-நடிகை சமந்தா + "||" + Family life is happy The actress Samantha

“குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது”-நடிகை சமந்தா

“குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது”-நடிகை சமந்தா
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்த சமந்தா மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடிக்கிறார்.
“திருமணத்துக்கு பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். ஆனால் நடிகையாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மனைவியானதால் நிறைய குடும்ப பொறுப்புகள் வந்துள்ளது. பக்குவமும் ஏற்பட்டு இருக்கிறது. குடும்ப பெண்கள் மாதிரி இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் உடனே வீட்டு ஞாபகம் வந்து எப்போது வீடு போய் சேருவேன் என்ற சிந்தனைதான் இருக்கிறது.


குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். நடிகையாக எப்போதும் போலவே இருக்கிறேன். ரசிகர்கள் விரும்பி பார்க்கிற மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறேன். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் வந்துள்ளது. ராம்சரணுடன் நான் நடித்துள்ள ரங்கஸ்தலம் தெலுங்கு படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன்.

அந்த படத்தின் டிரெய்லர் மற்றும் புகைப்படங்களில் எனது கிராமத்து பெண் தோற்றத்தை பார்த்து பலரும் வியந்து போய் பாராட்டுகிறார்கள். அசல் கிராமத்து பெண்போல் இருப்பதாக கூறுகிறார்கள். நான் நகரத்தில் வாழ்ந்த பெண். கிராமத்து பெண்களின் வாழ்க்கை பழக்க வழக்கங்கள், சூழல் எதுவும் தெரியாது. ஆனாலும் அந்த படத்தில் நடித்த பிறகு எனக்குள் ஒரு கிராமத்து பெண் மறைந்து இருப்பதை உணர்ந்தேன். படத்தில் எனது நடிப்பு பிரமாதமாக இருக்கும்.” இவ்வாறு சமந்தா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...