சினிமா செய்திகள்

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகைக்கு இந்தி நடிகர் உதவி + "||" + Treatment without money Actress Help Hindi Actor

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகைக்கு இந்தி நடிகர் உதவி

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகைக்கு இந்தி நடிகர் உதவி
நடிகை பூஜா தட்வால் காசநோய் தாக்கி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகைக்கு இந்தி நடிகர் உதவி செய்தார்.
நடிகை பூஜா தட்வால் சிகிச்சைக்கு உதவிய நடிகர் ரவி கிஷன்.
சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாகவும் இந்துஸ்தான், சிந்தூர் கி கவுகாந்த் உள்பட மேலும் பல படங்களிலும் நடித்துள்ள பூஜா தட்வால் காசநோய் தாக்கி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் கணவரும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் அவரை விட்டு விட்டு சென்று விட்டனர்.


பூஜா தட்வால் கையில் பணம் இல்லாமல் தவித்தார். அவர் மீது சிலர் பரிதாபப்பட்டு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். தனது நிலை குறித்து பேசி வீடியோ ஒன்றை பூஜா தட்வால் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார். அதில் 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு காசநோய் வந்துவிட்டது என்றும், சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்தேன். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்ததும் இந்தி நடிகர் ரவி கிஷன் அவருக்கு உதவ முன்வந்தார். தனது உதவியாளர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பண உதவி செய்தார். பூஜா தட்வாலும், ரவி கிஷனும் 1997-ல் வெளியான தம்ஸ் பியார் கோ கையா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். சல்மான்கானிடம் இருந்து பூஜா தட்வாலுக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...