சினிமா செய்திகள்

திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நடிப்பேன் - ஸ்ரேயா + "||" + After marriage, I will act as heroine - Shriya

திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நடிப்பேன் - ஸ்ரேயா

திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நடிப்பேன் - ஸ்ரேயா
திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நடிப்பேன் என நடிகை ஸ்ரேயா கூறினார்.
2003-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், ஸ்ரேயா. ‘மழை,’ ‘கந்தசாமி,’ ‘குட்டி,’ ‘திருவிளையாடல் ஆரம்பம்,’ ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்,’ ‘சிவாஜி’ உள்பட பல படங்களில் நடித்த அவர், தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேவை சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.


இருவரும் நீண்ட கால காதலர்களாக இருந்தார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பின், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இவர்களின் திருமணத்துக்கு ஆன்ட்ரூ கோச்சேவ் தரப்பில் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு தடை எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, நிச்சயித்த தேதிக்கு முன்பாகவே திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்கு மிக நெருக்கமான நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. தனக்கு திருமணம் நடந்தது வெளியில் தெரியவேண்டாம் என்று ஸ்ரேயா நினைத்ததால்தான் அவர், ‘ரகசியமாக’ திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

“திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். அதுவும் கதாநாயகியாகவே நடிப்பேன்” என்று ஸ்ரேயா அறிவித்து இருக்கிறார். அவருடைய முடிவை நெருக்கமான தயாரிப்பாளர்களுக்கு ‘போன்’ மூலம் தெரிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற இருக்கும் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் ஸ்ரேயா கலந்து கொள்ள இருக்கிறார். அந்த படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தேஜா டைரக்டு செய்கிறார். ஸ்ரேயாவுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஆகிய 2 கதாநாயகிகளும் அந்த படத்தில் இருக்கிறார்கள்.

“2 அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடிப்பதில், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என் கதாபாத்திரம் திருப்திகரமாக இருக்கிறதா? என்பதை மட்டும் பார்க்கிறேன்” என்கிறார், ஸ்ரேயா. அவருக்கு இப்போது, 35 வயது ஆகிறது. அவருடைய சொந்த ஊர், ஹரிதுவார். அப்பா புஷ்பேந்திர சரண், ‘பெல்’ நிறுவனத்தில் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். அம்மா நீர்ஜா சரண், கல்லூரி பேராசிரியையாக இருந்தவர். ஒரே அண்ணன் அபிரூப், விளம்பர படங்களை தயாரித்து இயக்கி வருகிறார்.