சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முயற்சி + "||" + Trying to bring the film with Rajinikanth's film as planned

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முயற்சி

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முயற்சி
ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முயற்சி நடைபெறுகின்றன.

‘கபாலி’ படத்தை அடுத்து பா.ரஞ்சித் டைரக்‌ஷனில், ரஜினிகாந்த் நடித்து வந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் முடிவடைந்தன. படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி, அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது.

வேலை நிறுத்தம் முடிந்தபின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்களை திரைக்கு கொண்டு வந்த பின்னரே மற்ற படங்களை வெளியிட அனுமதிக்கப்படும் என்று சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் புதிய படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற தடையில்லா சான்று மற்றும் விளம்பர ஒப்புதல் கடிதம் இரண்டும் வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தனர்.

ஏப்ரல் 27 அன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ படத்துக்கு இந்த சான்றிதழ் வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்து வந்தது.

இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்)யில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரின் தயாரிப்பு நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

‘காலா’ படம் தணிக்கை சான்றிதழ் பெற தேவையான அனுமதி கடிதங்களை வர்த்தக சபையில் இருந்து தனுஷ் நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, ‘காலா’ படத்தை திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஹூமாகுரோசி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டீல், சாயாஜி ஷின்டே, ரவி காளே மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். நடிகர் தனுஷ் தயாரித்து இருக்கிறார்.