சினிமா செய்திகள்

தோள்பட்டையில் ஆபரேஷன்:இந்தி படத்தில் இருந்து விலகிய மாதவன் + "||" + Hindi film Dropping Madhavan

தோள்பட்டையில் ஆபரேஷன்:இந்தி படத்தில் இருந்து விலகிய மாதவன்

தோள்பட்டையில் ஆபரேஷன்:இந்தி படத்தில் இருந்து விலகிய மாதவன்
மாதவன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
மாதவன் தற்போது தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த ‘விக்ரம் வேதா’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் பார்த்தது. சமீபத்தில் மாதவன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். காயம் குணமாக சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வெற்றிபெற்ற ‘டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிக்கிறார். ரோகித் ஷெட்டி இயக்குகிறார். தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக மாதவன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து மீண்டு வருகிறேன். இதனால் ரோகித் ஷெட்டி படத்தில் என்னால் நடிக்க இயலவில்லை. அவரது படங்களின் ரசிகனாக இருக்கும் நான், இந்த படத்தில் நடிக்க இயலாமல் போனது வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...