சினிமா செய்திகள்

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’ + "||" + Hollywood movie Avengers-3

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3’
ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்-3 ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ என்ற பெயரில் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
மார்வல் காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் வெளியாவதால் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏற்கனவே வெளியான அவெஞ்சர்ஸ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளன.

அவெஞ்சர்ஸ் முதல் பாகம் 2012-லும், அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகம் படம் ‘அவெஞ்சர்ஸ் அல்ட்ரான்’ என்ற பெயரில் 2015-லும் வெளியாகி வெற்றி பெற்றன. தற்போது இதன் மூன்றாம் பாகம், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ என்ற பெயரில் தயாராகி அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் திரைக்கு வருகிறது.

22 சூப்பர் ஹீரோக்கள், தாநோஸ் வில்லனோடு மோதும் காட்சிகள் மிரட்சியாக படமாக்கப்பட்டு உள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். சுமார் ரூ.1,700 கோடி செலவில் இந்த படம் தயாராகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

ராபர்ட் டவுனி ஜூனியர், ‘ஐயன்மேன்’ கதாபாத்திரத்திலும், கிரிஷ் ஹேம்ஸ்வார்த் ‘தோர்’ என்ற கதாபாத்திரத்திலும், மார்க் ரூபலோ ‘ஹல்க்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டாம் ஹிட்டில்சன் லோகியாகவும், தாம் ஹலேன்ட் ஸ்பைடர் மேனாகவும் வருகிறார்கள். இந்த படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர்.

இந்த படம் முந்தைய இரண்டு பாகங்களை விட அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.