சினிமா செய்திகள்

“என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி + "||" + love - Actress Topsy

“என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி

“என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி
எனக்கு ரசிகர்களிடம் இருந்து காதல் கடிதங்கள் வந்து குவிகின்றன என்று நடிகை டாப்சி கூறினார்.
‘ஆடுகளம்’ படத்தில் பிரபலமான டாப்சி, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை என்று தொடர்ந்து நடித்தார். தெலுங்குக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையாக வளர்ந்தார். ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் என்று சக நடிகைகளை போல் மார்க்கெட்டை அவரால் தக்க வைக்க முடியவில்லை.

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமையாததே அதற்கு காரணம். இதனால் இந்திக்கு போனார். அங்கு ‘நாம் சபானா’, ‘ஜாத்வா-2’ என்று திறைமையை வெளிப்படுத்தும் படங்கள் அமைந்தன. இதனால் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிக்கவும் தயாராகி இருக்கிறார்.

மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். டாப்சிக்கு நிறைய பேர் காதல் கடிதங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். இதுகுறித்து டாப்சி கூறியதாவது:-

“எனக்கு ரசிகர்களிடம் இருந்து காதல் கடிதங்கள் குவிகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் அவர்களின் அன்பை பார்க்க முடிகிறது. ஒரு ரசிகரின் காதல் கடிதம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. அவர் எழுதி இருந்த ஒவ்வொரு வரியும் கவர்ந்தது. அந்த கடிதத்தில் அவர், “நான் மது அருந்த மாட்டேன். மாமிசத்தை தொட மாட்டேன். எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவன். உன்மேல் எனக்கு இருக்கும் அன்பை நிரூபிக்க உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே. என் மனதில் முழுமையாக நீதான் இருக்கிறாய்” என்று எழுதி இருந்தார். எனக்கு வந்த காதல் கடிதங்களில் இதுதான் சிறந்தது. எனவே அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்”.

இவ்வாறு டாப்சி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘‘சினிமா தொழில் நிரந்தரம் இல்லை’’ – நடிகை டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் தயாராகும் கேம் ஓவர் படத்திலும் நடிக்கிறார்.
2. உணவகம் தொடங்கும் நடிகை டாப்சி
பிங்க், நாம் சபானா படங்களுக்கு பிறகு இந்தியில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் டாப்சி.