சினிமா செய்திகள்

திருமண நகைகள் வாங்கிய தீபிகா படுகோனே + "||" + Deepika Padukone bought wedding jewelry

திருமண நகைகள் வாங்கிய தீபிகா படுகோனே

திருமண நகைகள் வாங்கிய தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே லண்டனில் திருமணத்துக்கான நகைகளை வாங்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தீபிகா படுகோனே. ‘பத்மாவத்’ படம் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்த படத்தில் நடித்து சர்ச்சைகளில் சிக்கினார். படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தீபிகா படுகோனே தலைக்கு பரிசு அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

இதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எதிர்ப்பையும் மீறி ‘பத்மாவத்’ படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. தீபிகா படுகோனேவுக்கும் பத்மாவத் படத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் லண்டனில் ஜோடியாக கடைக்கு சென்று திருமணத்துக்கான நகைகளை வாங்கி உள்ளனர். தீபிகா படுகோனேவின் தாய் மற்றும் சகோதரியும் உடன் சென்று இருந்தனர். இதன் மூலம் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பது உறுதியாகி உள்ளதாக இந்தி பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.