சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை மருத்துவமனை தரப்பில் விளக்கம் + "||" + Legendary actress Jayanti About the information released Untrue

பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை மருத்துவமனை தரப்பில் விளக்கம்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை  மருத்துவமனை தரப்பில் விளக்கம்
பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர்

எதிர்நீச்சல், வெள்ளிவிழா, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(73) உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால்  பழம்பெரும் நடிகை ஜெயந்தி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என தெரியவந்து உள்ளது. நடிகை ஜெயந்தி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை தரப்பில் விளக்கம்  அளிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் 11-10-1945 அன்று பிறந்த ஜெயந்தி கமலாகுமாரி, பின்னர் ஜெயந்தி என்ற பெயருடன் திரையுலகில் நுழைந்தார். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500 படங்களில் ஜெயந்தி நடித்துள்ளார். 

குறிப்பாக, 1960,1970 மற்றும் 1980-களின் துவக்க காலத்தில் அன்றைய முன்னாள் கதாநாயகர்கள் பலருடன் இவர் ஜோடியாக நடித்தார். கன்னட நடிகர் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், வெள்ளிவிழா, பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா, கண்ணா நலமா? போன்ற படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் திறம்பட நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆ.ருடன் படகோட்டி மற்றும் முகராசி ஆகிய படங்களில் நடித்தார். சிவாஜி கணேசனுடன் கர்ணன், இருவர் உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிகமான படத்திலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகை மற்றும் துணை நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் தேசிய விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ள ஜெயந்தி, மிஸ் மாலினி படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...