சினிமா செய்திகள்

இளம் டி.வி. நடிகர் மர்ம சாவு + "||" + Young TV Actor mystery death

இளம் டி.வி. நடிகர் மர்ம சாவு

இளம் டி.வி. நடிகர் மர்ம சாவு
மும்பையில் டி.வி. நடிகர் கரண் பரஞ்பே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இந்தியில் ‘தில் மில் கயி’ என்ற டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இளம் நடிகர் கரண் பரஞ்பே(வயது 26). இதில் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்சாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ் என்றே அழைத்து வந்தனர்.

மேலும் பல டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் படுக்கை அறையில் கரண் பரஞ்பே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சாந்தி உள்பட பல டி.வி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் நரேந்திர ஜா கடந்த மாதம் புனேயில் மரணம் அடைந்தார். அடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் மரணம் அடைந்து இருப்பது டெவிவிஷன் நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.