சினிமா செய்திகள்

உடல் எடை கூடுவது பற்றி கவலைப்படாத நித்யா மேனன் + "||" + Nithya Menon is not worried about her weight gain

உடல் எடை கூடுவது பற்றி கவலைப்படாத நித்யா மேனன்

உடல் எடை கூடுவது பற்றி கவலைப்படாத நித்யா மேனன்
சமீபத்தில் பொது நிகழ்ச்சியொன்றில் நித்யாமேனன் குண்டான தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நித்யாமேனனுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கில் நிறைய ரசிகர்கள். கதை, கதாபாத்திரம் பிடித்தால் சிறிய நடிகர்கள், பிரபலமில்லா டைரக்டர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் நடிக்கிறார். சமீபத்தில் தெலுங்கு படத்தில் ஓரின சேர்க்கையாளராக வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

தமிழில் 180 படம் மூலம் அறிமுகமாகி வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி படங்களில் நடித்து மெர்சலில் விஜய் ஜோடியாக கனமான கதாபாத்திரத்தில் வந்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் பிராணா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நித்யாமேனன் திடீரென்று எடை கூடி இருக்கிறார். சமீபத்தில் பொது நிகழ்ச்சியொன்றில் அவரது குண்டான தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். அவர் உடல் பருமனாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வைரலாகி அவரை கிண்டல் செய்து விமர்சனங்கள் வந்தன. எடையை குறைக்கும்படி சிலர் அறிவுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து நித்யா மேனன் கூறியதாவது:-

“என் உடல் எடை கூடியதை பற்றி பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். எடையை குறைக்கும்படியும் வற்புறுத்துகின்றனர். உடல் எடை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. உணவிலும் கட்டுப்பாடு வைப்பது இல்லை. பிடித்ததை சாப்பிடுவேன். படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது அதிகமாக சாப்பிடுவது உண்டு. இதனால்தான் எடை கூடி இருக்கிறது. விரைவில் எடையை குறைக்க போகிறேன். நான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு ஒல்லியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அந்த படத்துக்காக எடையை குறைக்கிறேன்.”

இவ்வாறு நித்யாமேனன் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. என் உடல் எடையை விமர்சிப்பதா? –நித்யா மேனன்
உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியதையடித்து இந்த விமர்சனங்களுக்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார்.