சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்த் ஜோடி யார்? + "||" + Karthik Subhashraj in the film Who is Rajinikanth's pair?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்த் ஜோடி யார்?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்த் ஜோடி யார்?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பவர் யார்? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசியல் கட்சி தொடங்குவதில் பரபரப்பாக இருக்கும் ரஜினிகாந்த் புதிய படமொன்றில் நடிக்கவும் தயாராகி வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்கிறார். இவர் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கி பிரபலமானவர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ரஜினிகாந்தை கார்த்திக் சுப்புராஜ் இரு தினங்களுக்கு முன்பு சந்தித்தார். அப்போது படத்தின் முழு கதையையும் அவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பவர் யார்? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, தீபிகா படுகோனே, அஞ்சலி ஆகிய 3 பேர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தீபிகா படுகோனே கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். இறைவி படத்தில் அஞ்சலி நடித்து கார்த்திக் சுப்புராஜுடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார். கதாநாயகி யார்? என்பது ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ ‘மேக்கிங் வீடியோ’ இணையதளத்தில் வெளியானது
ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் 29-ந்தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் கதாநாயகி, எமிஜாக்சன்.
2. அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் -அமைச்சர் ஜெயக்குமார்
அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. ‘என் ஒப்புதலுடன் தான் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ ரஜினிகாந்த் திடீர் விளக்கம்
ரஜினி மக்கள் மன்றத்தில் என் ஒப்புதலுடன் தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
4. வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது - ரஜினிகாந்த்
வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
5. கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்கள்.