சினிமா செய்திகள்

இயற்கை விவசாயத்தில் நடிகர் கார்த்தி ஆர்வம் + "||" + Actor Karthi is interested in agriculture

இயற்கை விவசாயத்தில் நடிகர் கார்த்தி ஆர்வம்

இயற்கை விவசாயத்தில் நடிகர் கார்த்தி ஆர்வம்
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். விவசாயம் சார்ந்த புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.
நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே விளைநிலங்களுக்கு நேரில் சென்று இயற்கை விவசாய முறையை நேரில் பார்த்தார். அங்கு விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்தார். அங்குள்ள நிலத்தில் காளைகளை ஏரில் பூட்டி உழுதார்.

இதுகுறித்து கார்த்தி கூறியதாவது:-

“விளைநிலங்களில் நடக்கும் இயற்கை விவசாயத்தை நேரில் பார்த்தேன். விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் விவசாய நிலங்களுக்கு சென்று பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கார்த்தி கூறினார்.